NATIONAL

மழையின் காரணமாகப் பத்தாங் காலி நிலச்சரிவின் மீட்பு பணிகள் ஒத்திவைப்பு

17 டிசம்பர் 2022, 3:17 AM
மழையின் காரணமாகப் பத்தாங் காலி நிலச்சரிவின் மீட்பு பணிகள் ஒத்திவைப்பு

பத்தாங் காலி, டிச.17:  உலு சிலாங்கூர், பத்தாங் காலி, கம்போங் குவாந்தானில் உள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் என்ற இடத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்கும் தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) நடவடிக்கை மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நடவடிக்கைகள் காலை மணி 8 க்கு மீண்டும் தொடங்கும் என்று உலு சிலாங்கூர் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா தெரிவித்தார்.

நேற்றிரவு நிலவரப்படி, 12 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 பேரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.