ALAM SEKITAR & CUACA

நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மந்திரி புசார் அனுதாபம்

16 டிசம்பர் 2022, 10:47 AM
நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மந்திரி புசார் அனுதாபம்

ஷா ஆலம், டிச 16- உலு சிலாங்கூர், பத்தாங் காலி, கம்போங் குவாந்தானில் உள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மந்திரி புசார் அனுதாபம் தெரிவித்துக் கொண்டார்.

இந்தப் பேரிடரில்  பலியான 12 பேரின்  குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்திலிருந்த 94 பேரில் 46 வருகையாளர்கள் மற்றும் 14 தொழிலாளர்களை உள்ளடக்கிய  மொத்தம் 60 பேர்  இன்று மதியம் 12.00 மணி வரை மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி இப்பேரிடரில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சிலாங்கூர் சுகாதார இலாகா உறுதிப்படுத்தியது.மேலும் 77 பேர்  மீட்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியிருக்கும் 22 பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்கும்  நடவடிக்கையில்  446 தீயணைப்பு படை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமிருடின் குறிப்பிட்டார்.

இன்று மாலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் அமிருடின் சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிடுகிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.