ALAM SEKITAR & CUACA

நிலச்சரிவில் சிக்கியர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்- காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

16 டிசம்பர் 2022, 5:46 AM
நிலச்சரிவில் சிக்கியர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்- காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ஷா ஆலம், டிச 16- ஜாலான் கெந்திங்- பத்தாங் காலி சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர்த் தப்பியவர்கள்  உலுயாம் பாரு போலீஸ் நிலையத்தில் அடைக்கம் பெற்றுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள்  சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் இயற்கை விவசாய பண்ணைக்கு அருகே நிகழந்த இந்த நிலச்சரிவில்  இதுவரை 13 பேர் உயிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 79 பேர் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முன்னதாக கூறியிருந்தது.

பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்புப் பணிகளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அவசரகால சேவை உதவிப் பிரிவு, மோப்ப நாய்ப் பிரிவு உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.