NATIONAL

பிரேக் பழுது- கிளானா ஜெயா எல்.ஆர்.டி. சேவையில் மீண்டும் இடையூறு

14 டிசம்பர் 2022, 9:30 AM
பிரேக் பழுது- கிளானா ஜெயா எல்.ஆர்.டி. சேவையில் மீண்டும் இடையூறு

ஷா ஆலம், டிச 14- கிளானா ஜெயா எல்.ஆர்.டி. இலகு இரயில் சேவைத்

தடத்தில் மீண்டும் பிரேக் முறையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த

தடத்தில் பயண இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பழுது காரணமாக ஒரு இரயிலை வெளியேற்ற வேண்டியுள்ளதால்

கிளானா ஜெயா மற்றும் லெம்பா சுபாங் வரையிலான பகுதியில் பயண

நேர இடைவெளி 10 நிமிடங்களாக அதிகரிக்கும் என ரெப்பிட் கேஎல்

நிறுவனம் கூறியது.

பயண நேரத்தை நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம். சமீபத்திய

நிலவரங்களுக்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள் என்று அந்நிறுவனம்

தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இத்தடத்திற்கான பயணச் சேவை தொடர்பான மேல் விபரங்களை

https://myrapid.com.my எனும் அகப்பக்கம் வாயிலாகவும் ரெப்பிட் கேஎல்

நிறுவனத்தின் அகப்பக்கம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.