NATIONAL

குழந்தையின் உடல் கால்வாயில் கண்டெடுப்பு- காதல் ஜோடி கைது

13 டிசம்பர் 2022, 2:45 AM
குழந்தையின் உடல் கால்வாயில் கண்டெடுப்பு- காதல் ஜோடி கைது

ஜோகூர் பாரு, டிச 13- புதிதாக பிறந்த பெண் குழந்தையின் சடலம்

இங்குள்ளக் கம்போங் மிலாயு பாண்டானிலுள்ள கால்வாயில் வீசப்பட்டச்

சம்பவம் தொடர்பில் காதல் ஜோடியை போலீசார் விசாரணைக்காகத் தடுத்து

வைத்துள்ளனர்.

தொப்புள் கொடியுடன் குழந்தையின் சடலம் கால்வாயில் கிடப்பது

தொடர்பான தகவலைத் தாங்கள் 33 வயதுடைய பெண்மணி

ஒருவரிடமிருந்து நேற்று காலை 11.50 மணியளவில் பெற்றதாக ஸ்ரீ

ஆலாம் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டிஎஸ்பி டாக்டர்

முகமது ரோஸ்லான் கூறினார்.

இப்புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்

தொழிற்சாலை ஒன்றில் ஆப்ரேட்டர்களாக வேலை செய்யும் 28 வயது

ஆடவர் மற்றும் 27 வயது பெண்னை அன்றைய தினம் பிற்பகல் 1.30

மணியளவில் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த ஜோடியிடமிருந்து இரத்தக் கறை படித்த டி-சட்டை மற்றும் கைலி

ஆகியவற்றை தாங்கள் கைப்பற்றியதாக இன்று இங்கு வெளியிட்ட

அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

அந்த காதல் ஜோடிக்கு எதிராக எந்த குற்றப் பதிவும் இல்லை என்பது

தொடக்கக்கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், அந்த

குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சவப்பரிசோனைகாகச் சுல்தானா அமினா

மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.