NATIONAL

அம்பாங்  நிலச்சரிவில்  உயிர் பிழைத்த 6 பேரில் முதியவரும் அடங்குவர்

10 டிசம்பர் 2022, 5:59 AM
அம்பாங்  நிலச்சரிவில்  உயிர் பிழைத்த 6 பேரில் முதியவரும் அடங்குவர்

கோலாலம்பூர், டிசம்பர் 9: நேற்று மதியம் அம்பாங்கில் உள்ள தாமான் அலமானில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிய 6 பேரில் ஒரு வயதான பெண்மணியும் அடங்குவார். இந்த சம்பவத்தில் அவர்கள் வசித்து வந்த வீடும் சேதமடைந்தது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், அம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு ஐந்து நிமிடங்களுக்குள் சென்றடைந்தனர் எனத் தெரிவித்தார்.

முதல் கட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மட்டும் ஆட்கள் வசித்து வந்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

"தோராயமாக 9 மீட்டர் x 15 சதுர மீட்டர் அளவுள்ள ஒரு குன்றில் சரிவு ஏற்பட்டது,  "சம்பவத்தின் போது அவ்வீட்டில் 70 வயதுடைய ஒரு வயதான பெண், ஒரு ஆண் மற்றும் 40 வயதுடைய ஒரு பெண், மற்றும் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட மூன்று இளம் பெண்கள் இருந்தனர்," என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப் பட்டதாக நோரசம் கூறினார். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்தைக் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.