ALAM SEKITAR & CUACA

தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் மூவர் காயம்- மேற்கு ஜாவாவில் சம்பவம்

7 டிசம்பர் 2022, 7:19 AM
தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் மூவர் காயம்- மேற்கு ஜாவாவில் சம்பவம்

ஜாகர்த்தா, டிச 7- மேற்கு ஜாவாவிலுள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது மூன்று போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

உள்ளுர் நேரப்படி காலை 8.30 மணியளவில் பாண்டோங், ஜாலான் அஸ்தானா அன்யாரில் உள்ள அந்த போலீஸ் நிலையத்தின் நுழைவாயிலில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு தற்கொலைத் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

போலீசார் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ள வேளையில் இத்தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.