NATIONAL

நிதி அமைச்சகத்தில் குப்பை அறை தீப்பிடித்தது, சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

7 டிசம்பர் 2022, 3:48 AM
நிதி அமைச்சகத்தில் குப்பை அறை தீப்பிடித்தது,  சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

புத்ராஜெயா, டிச 7: இன்று பிற்பகல் மணி 2.26 அளவில் இங்குள்ள, கருவூலக் கட்டிடத்தில் உள்ள குப்பை அறையில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதை நிதி அமைச்சு (MOF) உறுதிப்படுத்தியது, மேலும் சம்பவத்திற்கான காரணத்தை அறிய இன்னும் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறது.

“புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரால் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு கருவூலக் கட்டிடத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாதிப்புகள் எதுவும் இல்லை" என்று நிதி அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், இழப்பு எவ்வளவு என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணைத் தலைவர் எம். சுராஸ் உறுதிப்படுத்தினார், அவர் பிற்பகல் மணி 2.34 அளவில் தனக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.