ECONOMY

அமைச்சர்களின் மாதச் சம்பளம் 20 விழுக்காடு குறைப்பு- அமைச்சரவை ஒப்புதல்

5 டிசம்பர் 2022, 10:41 AM
அமைச்சர்களின் மாதச் சம்பளம் 20 விழுக்காடு குறைப்பு- அமைச்சரவை ஒப்புதல்

புத்ராஜெயா, டிச 5- அமைச்சர்களின் மாதச் சம்பளத்தில் 20 விழுக்காடு குறைக்க அமைச்சரவை இன்று ஒப்புக் கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் மீது அமைச்சரவை உறுப்பினர்கள் கொண்டுள்ள பிரிவின் வெளிப்பாடாக இந்த சம்பளக் குறைப்பு அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு காணும் வரை இந்த சம்பளக் குறைப்புத் திட்டம் அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

ஒரு வேளை பொருளாதாரம் மூன்று ஆண்டுகளில் மீட்சி கண்டால் இந்த முடிவை மறுஆய்வு செய்வோம். இந்த சம்பளக் குறைப்பு அவசியமற்றதுதான். சிறிது தியாகத்தைச் செய்ய முன்வந்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

நிதியமைச்சர் சம்பளத்தைப் பெறும் காரணத்தால் அன்வார் பிரதமர் சம்பளத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அது சரியில்ல. நான் எந்த சம்பளத்தையும் பெற மாட்டேன் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.