ECONOMY

அடுத்தாண்டு பூப்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் திங்கள் தொடங்கி விற்கப்படும்

3 டிசம்பர் 2022, 11:35 AM
அடுத்தாண்டு பூப்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் திங்கள் தொடங்கி விற்கப்படும்

கோலாலம்பூர், டிச 3: அடுத்த ஆண்டு ஜனவரி 10 முதல் 15 வரை இங்குள்ள புக்கிட் ஜாலில் உள்ள ஆக்சியாட்டா அரீனாவில் 2023ஆம் ஆண்டுக்கான மலேசியப் பூப்பந்து போட்டியைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 5) காலை மணி 11 முதல் இணையத்தின் வழி டிக்கெட்டுகளை வாங்கலாம். டிக்கெட்டுகளின் விலை RM40யிலிருந்து தொடங்கும் என மலேசியாவின் பேட்மிண்டன் சங்கத்தின் (BAM) பொதுச்செயலாளர் டத்தோ கென்னி கோ கூறினார்.

"இந்த ஆண்டு நிகழ்வின் உற்சாகத்தை ரசிகர்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள். தினமும் மக்கள் கூட்டம் அலைமோதும் அற்புதமான நிகழ்வு இது. பூப்பந்து வீரர்கள் 2023ஆம் ஆண்டைச் சிறப்பாக தொடங்க முயற்சிப்பதால் அடுத்த ஆண்டு மிகவும் உற்சாகமாக இருக்கும், அதே நேரத்தில் நம் தேசிய பூப்பந்து வீரர்கள் வெற்றியை இலக்காகக் கொண்டிருப்பார்கள், ”என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் இரட்டையர் உலக சாம்பியனான ஆரோன் சியா-சோ வூய் யிக் மற்றும் நாட்டின் முதன்மையான பெண்கள் இரட்டையர் பேர்லி டான்-எம் தினா ஆகியோர் மலேசியப் பூப்பந்து ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களுக்கு ஆதரவாக வரும்போது அவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்று அவர் கூறினார்.

"மலேசிய ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது மற்றும் உலகின் மிகப் பழமையான போட்டிகளில் ஒன்றான பூப்பந்தில் ஈடுப்பட எங்கள் வீரர்களை ஊக்குவிக்கும்," என்று அவர் கூறினார்

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.