ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இன்று மதியம் மணி 12 வரை தொடரும்

3 டிசம்பர் 2022, 3:57 AM
சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இன்று மதியம் மணி 12 வரை தொடரும்

ஷா ஆலம், டிச 3: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), இன்று மதியம் 12 மணி வரை சிலாங்கூரில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணித்துள்ளது.

அவ்விடங்கள் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்கள் என்று அந்நிறுவனம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

பேராக்கில் உள்ள மஞ்சோங், பேராக் தெங்கா, பாகன் டத்தோ, ஹிலிர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முவால்லிம் ஆகிய இடங்களிலும் இதே வானிலைதான் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியா, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் (மிமீ/மணி) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது,  மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாகப் பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையத்தளத்தை அல்லது ``myCuaca``வை நாடவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.