ECONOMY

புதிய அமைச்சரவையில் ஜ.செ.க வின்  வி. சிவக்குமார் மனித வள அமைச்சர் ஆனார். 

2 டிசம்பர் 2022, 2:03 PM
புதிய  அமைச்சரவையில் ஜ.செ.க வின்  வி. சிவக்குமார் மனித வள அமைச்சர்  ஆனார். 
புதிய  அமைச்சரவையில் ஜ.செ.க வின்  வி. சிவக்குமார் மனித வள அமைச்சர்  ஆனார். 
புதிய  அமைச்சரவையில் ஜ.செ.க வின்  வி. சிவக்குமார் மனித வள அமைச்சர்  ஆனார். 

கோலாலம்பூர் டிச 2 ;- கடந்த 19-11-2022 நாட்டின் 15வது பொதுத் தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்ற நிலைமை சீர்செய்து மாமன்னர் மற்றும்  அரச கவுன்சில் ஒரு மித்த  இணக்கத்துடன், ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க மாமன்னர் ஆலோசனை  வழங்கினார்

. அதன்படி அமைக்கப்பட்ட அரசாங்கத்தில்  கூட்டு அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும், அதன் பலத்தின்  அடிப்படையில் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் & நிதி அமைச்சர் - டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

துணை பிரதமர் & கூட்டரசு மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சர் - டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி

துணை பிரதமர், தோட்டம்  மற்றும் உற்பத்தி பொருட்கள் அமைச்சர் - டத்தோஸ்ரீ ஃபாதிலா யூசாஃப்.

இந்திய சமுதாயத்தின்  பிரதிநிதிக்கு  மனித வளம் மீண்டும்  ஒதுக்கப் பட்டுள்ளது.  அதை  ஜ.செ.கா வின்  வி. சிவக்குமார் ஏற்று மனித வள அமைச்சராக  ஆகியுள்ளார்.

.போக்குவரத்து அமைச்சர் - அந்தோணி லோக்

வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - முகமது பின் சாபு

பொருளாதார துறை அமைச்சர் - முகமது ரபிஸி பின் ரம்லி

ஊராட்சி வளர்ச்சி அமைச்சர் - ங்கா கோர் மிங்

பாதுகாப்பு அமைச்சர் - முகமது பின் ஹாசன்

பொதுப்பணித்துறை அமைச்சர் - அலெக்சாண்டர் நந்தா லிங்கி

உள்துறை அமைச்சர் - சைபுதீன் நசுதின் பின் இஸ்மாயில்

சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் - தெங்கு ஜஃப்ருல் அஜீஸ்

உயர்கல்வி அமைச்சர் - காலிட் நோர்டின்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் - சாங் லி கா

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் - நான்சி சுக்ரி

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் - சலாஹுதீன் அயூப்

பிரதமர் துறை சட்ட அமைச்சர்  - அஸ்லினா ஓத்மான்

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் - நிக் நஸ்மி நிக் அகமது

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் - இவான் பெனடிக்ட்

வெளியுறவு அமைச்சர் - ஜாம்ப்ரி அப்துல் காதிர்

சுற்றுலா அமைச்சர் - தியோங் கெங் செங்

டிஜிட்டல் தொடர்பு அமைச்சர் - அஹ்மத் ஃபஹ்மி ஃபட்சில்

கல்வி அமைச்சர் - ஃபத்லினா சிடெக்

தேசிய ஒற்றுமை அமைச்சர் - அகோஹ் அனக் அகாங்

சமய விவகார அமைச்சர் - டத்தோ சித்தியா நைம் மொக்தார்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் - ஹன்னா யோவ்

சுகாதார அமைச்சர் - டாக்டர். ஜலே ஹா முஸ்தபா

ஜேபிஎம் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) அமைச்சர் - அர்மிசான் பின் முகமது அலி

பிரதமர் துறை (நிதி விவகாரங்கள்) - டான் ஸ்ரீ ஹசன் மெரிக்கன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.