NATIONAL

கல்வியாளர் டாக்டர் சிடெக் பாபா காலமானார்

26 நவம்பர் 2022, 2:11 AM
கல்வியாளர் டாக்டர் சிடெக் பாபா காலமானார்

கோலாலம்பூர், நவ 26; கல்வியாளர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சிடெக் பாபா நேற்று இரவு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானர்.

இந்த தகவல் அவரின் மகன் இசுதீன் அவர்கள் தனது முகநூலில் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கோவிட்-19யின் பரிசோதனையை மேற்கொள்வதற்க்காக அவர் தந்தையின் சடலம் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் நண்பரான 76 வயதான டத்தோ சிடெக் பாபா, கம்போங் புலாவ், மஸ்ஜிட் தனா, மலாக்காவில் பிறந்தவர்.

2010யில் தேசியக் கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், 1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (மாணவர் மேம்பாட்டு விவகாரங்கள்) துணை ரெக்டராகவும் நியமிக்கப்பட்டதோடு, 2009யில் தேசிய அளவில் பெர்டான மெளலிதுர் ரசூல் விருதையும் பெற்றார்.

-பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.