ECONOMY

சிலாங்கூரின் அழகையும் அதன் பல்வேறு சுற்றுலாத்தளங்களையும் காட்டும் சர்வதேச புகைப்பட விழா

23 நவம்பர் 2022, 11:22 AM
சிலாங்கூரின் அழகையும் அதன் பல்வேறு சுற்றுலாத்தளங்களையும்  காட்டும் சர்வதேச புகைப்பட விழா

ஷா ஆலம், நவ 23; பெட்டாலிங் ஜெயாவில் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிலாங்கூர் சர்வதேச பயண புகைப்பட விழாவில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் சுற்றுலா இயக்கம் ஏற்பாடு செய்த அவ்விழாவில் புகைப்படம் எடுத்தல், கண்காட்சிகள், பேச்சு போட்டி மற்றும் புகைப்படங்கள் பற்றிய படைப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் மலேசியா, ஹாங்காங், தைவான், ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஐம்பது புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். ``சிலாங்கூர் மை ட்ரீம் டெஸ்டினேஷன்`` எனும் கருப்பொருள் கொண்ட புகைப்படம் போட்டியில் சுமார் 200 புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன.

இந்த விழா மாநிலத்தின் சுற்றுலாத் துறையை அறிமுகப் படுவத்தோடு மேலும் அதை மேம்படுத்த உதவும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது என சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லாய் சியான் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.