ALAM SEKITAR & CUACA

இவ்வாண்டு மாநில அரசின் முதியோர்களுக்கான உதவி  திட்டத்தில் 400,000க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர் 

23 நவம்பர் 2022, 7:06 AM
இவ்வாண்டு மாநில அரசின் முதியோர்களுக்கான உதவி  திட்டத்தில் 400,000க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர் 

ஷா ஆலம், நவ 23; மாநில அரசின் உதவித்திட்டங்களில்  ஒன்றான இல்திசம் சிலாங்கூர் பென்யயாங் கீழ் இயங்கும் ஸ்கிம் (SMUE)க்கு சிலாங்கூர் மூத்த குடிமக்களுக்கான  திட்டத்தில் 400,000க்கும் அதிகமானோர் பதிந்துள்ளனர்.

மாநில  சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், இத்திட்டத்தில் பதிந்த கொண்ட 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் RM100 வவுச்சர் பிறந்தநாள் பரிசாக பெற முடியும் என தெரிவித்தார். 15வது பொதுத் தேர்தலில் வென்ற 5 உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இதன் அர்த்தம் முதியவர்களை அவர்களின் வாழ்நாளில் பராமரிக்கும் முயற்சிக்காக குறைந்தபட்சம் RGM 40 மில்லியன் மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்றார் அவர். மேலும், இத்திட்டத்தில் இறப்புக்காக RM500 வழங்கப்படும் எனவும் அதற்கான RM7.5 மில்லியன் இவ்வாண்டு ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

26 நலன்புரி இல்லங்களில் RM 130,000 வழங்கும் விழாவை வீ.கணபதிராவ் தொடங்கி வைத்தார். முதியவர்களை போற்றுவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது; ஆகவே அதன்வழி ஒவ்வொரு உறுப்பினரும் தத்தம் பிறந்த நாளுக்கு RM100 வவுச்சரையும் மற்றும் இறப்புக்காக RM500 யும் பெற முடியும் என அவர் தெரிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.