ஷா ஆலம், நவ 23- கடல் பெருக்கும் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள காரணத்தால் நாளை வியாழக்கிழமை மற்றும்அவெள்ளிக்கிழமை கோல லங்காட் கடற்கரை பொது மக்களுக்கு மூடப்படவுள்ளது.
அவ்விரு தினங்களில் கடலில் குளிப்பது, கடற்கரை விளையாட்டுகளில் ஈடுபடுவது, மீன் பிடிப்பது, படகுச் சவாரி மற்றும் வணிகம் புரிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பின்பற்றி நடக்குமாறு கோல லங்காட் நகராண்மைக்கழகம் பொது மக்களை கேட்டுக் கொண்டது.
கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்குப்ட்ட பகுதியில் உள்ள பந்தாய் மோரிப், பந்தாய் கெலானாங், பந்தாய் பத்து லாவுட், பந்தாய் சுனாங், பந்தாய் தஞ்சோங் ரூ ஆகிய கடற்கரைகளுக்கு இந்த தடை பொருந்தும் என அது தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
இந்த தடை தொடர்பான மேல் விபரங்களுக்கு பொதுமக்கள் 03-31872825 என்ற எண்களில் அல்லது 012-3004891/012-3004256 என்ற வாட்ஸ்அப் புலனம் வழி தொடர்பு கொள்ளலாம்.






