ECONOMY

501 பள்ளிகளுக்கு வெ.1.25 கோடி வெள்ளி மானியம்- மாநில அரசு வழங்கியது

21 நவம்பர் 2022, 12:46 PM
501 பள்ளிகளுக்கு வெ.1.25 கோடி வெள்ளி மானியம்- மாநில அரசு வழங்கியது

ஷா ஆலம், நவ 21-  மாணவர்களின் வசதிக்காகவும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்துவதற்காகவும்  மாநிலம் முழுவதும் உள்ள 501 பள்ளிகளுக்கு மொத்தம் 1 கோடியே 25 லட்சம் வெள்ளி இன்று வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில பள்ளி உதவித் திட்டத்தின் கீழ்  381 சமயப் பள்ளிகள், 120 தேசிய மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒப்படைக்கப்பட்டதாக மந்திரி பெசார் கூறினார்.

இந்த உதவி பெற்ற பள்ளிகளில்  சிலாங்கூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் அடங்கும். மாணவர்களுக்கு உகந்த வசதியை வழங்குவதே இததிட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு 742 பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 2 கோடியே 65 லட்சம் வெள்ளி மொத்த ஒதுக்கீட்டின் ஒரு பகுதி இதுவாகும் என்று இங்குள்ள பேராக் ஜூப்லி மண்டபத்தில்  நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்வில்   அவர் தெரிவித்தார்.

மே மாதத்தில், சீன தேசிய வகைப் பள்ளிகள்,  தமிழ்ப் பள்ளிகள், சமயப் பள்ளிகள்,  மற்றும் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளும் இதே உதவி வழங்கப்பட்டதாக அமிருடீன் கூறினார்.

143  சீனப்பள்ளிகளுக்கும்  97 தமிழ்ப்பள்ளிகளுக்கும்  1 கோடியே 40 லட்சம் வெள்ளி மானியத்தை  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான  ஹீ லாய் சியான் மற்றும் வீ.கணபதிராவ் கடந்த மாதம் வழங்கினர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.