ஷா ஆலம், நவம்பர் 21 - சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியின் இரண்டாவது தொடர் அடுத்த மாதம் செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாயக் கண்காட்சி மையத்தில் (மேப்ஸ்)நடைபெற உள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் தெரிவித்தார்.தற்போதைய நிலவரப்படி மொத்தம் 250 நிறுவனங்கள் மற்றும் துறைகள் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த கண்காட்சியில் 15,000 வேலை தேடுபவர்களை ஈர்ப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம், இந்த கண்காட்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் பெரும் பயனளிக்கும் என்பதால், அதிகமான முதலாளிகள் இதில பங்கேற்க வேண்டும் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது.
சிலாங்கூர் இளைஞர்கள் பல்வேறு பதவிகள் மற்றும் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
ஷா ஆலம் எம்.பி.எஸ்.ஏ மாநாட்டு மையத்தில் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 12 வரை நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியில் மாநில அரசு நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
ECONOMY
அடுத்த மாதம் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி- 250 நிறுவனங்கள் பஙகேற்பு
21 நவம்பர் 2022, 12:21 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் நீண்டகால இடையூறுகள் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




