ஷா ஆலம், நவ 20- உலு லங்காட் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் முகமது சானி ஹம்சான் 14,896 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அமானா கட்சி சார்பில் போட்டியிட்ட அவருக்கு 58,382 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் சார்பில் போட்டியிட்ட டத்தோ முகமது ரட்ஸி அப்துல் லத்திப் 43,486 வாக்குகளையும் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ் 32,570 வாக்குகளையும் பெற்றனர்.







