கோல சிலாங்கூர்.நவ.18- 15 வது பொதுத் தேர்தலில் பொண்டொக் பன்னாசுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடையால் தேர்தல் மையங்களில் நிலவும் பதற்றம் குறைந்துள்ளது. சிலாங்கூர் இன்று கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் உள்ள சில வாக்களிப்பு மையங்களில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
12க்கும் மேற்பட்ட வாக்களிப்பு மையங்கள் பார்வையிட்ட போது தெரிய வந்தது. இருப்பினும் ஒரு சில மையங்களில் இன்னும் அரசியல் கட்சிகள் பொண்டொக் பன்னாஸ் அமைத்து தேர்தல் வாக்கு சேகரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பொண்டொக் பன்னாஸ் கடந்த காலங்களை போல் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக செயல்படுகிறது.
எதிர் காலத்தில் எஸ்.பி.ஆர் இந்த பொண்டொக் பன்னாஸ் அமைப்பு முறையை முற்றாக துடைத்தொழிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த பொண்டொக் பன்னாஸ் கடந்த காலத்தில் பதற்றத்தை உருவாக்கியது என்றால் மிகையாகாது.
சிலாங்கூர் இன்று பார்வையிட்ட வாக்களிப்பு மையங்கள் விவரம் பின்வருமாறு:-
அ. டமன்சாரா நாடாளுமன்றம்.
1. கம்போங் காயூ ஆரா இஸ்லாமிய பள்ளி.
2. பண்டார் உத்தாமா தேசியப் பள்ளி.
ஆ. சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி.
3. மெர்பாவ் செம்பாக் தேசிய பள்ளி.
இ. செலாயாங் நாடாளுமன்ற தொகுதி.
4. டேசா கோல்பீல்ட்ஸ் பொது மண்டபம்.
ஈ. கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி.
5.டேசா அமான் தேசிய பள்ளி, டேசா கோல்பீல்ட்ஸ்.
6. புக்கிட் பாடோங் தேசியப் பள்ளி.
7. எஸ்.எம்.கெ. இராஜ மூடா மூசா, பத்தாங் பெர்ஜுந்தை.
8. ஈஜோக், சீனப் பள்ளி பொது மண்டபம்.
9. புக்கிட் ரோத்தான் பாரு, தமிழ்ப்பள்ளி.
10. அசாம் ஜாவா இஸ்லாமிய பள்ளி.
11. ஜெரம், இஸ்லாமிய இடை நிலைப் பள்ளி.
12. ஜெரம், சீன பள்ளி.
13. தம்பாக் ஜாவா, தேசியப் பள்ளி.
இந்த 13 தேர்தல் மையங்களில் 3 மையங்களில் தேசிய முன்னணி பொண்டொக் பன்னாஸ் எஸ்.பி.ஆர். தடையை மீறி அமைத்துள்ளது. இருப்பினும் பதற்றம் இல்லாமல் அமைதியாக செயல் பட்டது.
இதே போல் நம்பிக்கை கூட்டணி 2 தேர்தல் மையங்களில் பொண்டொக் பன்னாஸ் அமைத்திருந்தது. இந்த 2 ம் அமைதியாக செயல் பட்டது.
தேசியக் கூட்டணி ( பீ.என் ) 3 இடங்களில் பொண்டொக் பன்னாஸ் அமைத்திருந்தது. இங்கு தேசியக் கூட்டணி சார்பில் பாஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார்.இந்த 3 பொண்டொக்களும் அமைதியாகத் தான் செயல் பட்டது. இந்த 3 பொண்டொக்கில் 1 பொண்டொக்கில் பாஸ் கட்சியின் கொடி பறக்க விட்டிருந்தது.
மற்ற அனைத்து தேர்தல் மையங்களில் முறையாக தங்கள் போட்டியிடும் சின்னம் மட்டுமே கட்டியிருந்தன.
பொண்டொக் பன்னாஸ் தடை விதித்தால் பதற்றம் குறைந்துள்ளது என்றால் மிகையாகாது. இனி வருங்காலங்களில் இந்த பொண்டொக் பன்னாஸ் தடை தீவிரப் படுத்தினால் அமைதியான சூழலில் தேர்தல் நடை பெறுவதை நாம் உறுதி செய்ய முடியும்.
செய்தி, சுப்பையா சுப்ரமணியம்







