ALAM SEKITAR & CUACA

மோசமான வானிலை காரணமாக சரவாக் பாராமில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது

19 நவம்பர் 2022, 11:30 AM
மோசமான வானிலை காரணமாக சரவாக் பாராமில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது

கோலாலம்பூர், நவ.19 - 15வது பொதுத் தேர்தலுக்கான சரவாக்கில் உள்ள பாராம் நாடாளுமன்றத் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளில் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே அறிவித்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் விமானம், நீர் அல்லது நிலம் வழியாக வாக்களிப்பு மையங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்  வாக்களிப்பு நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் செகோலா கெபாங்சான் (எஸ்கே) லாங் நா; எஸ்கே லாங் லுதெங்; ஆர்எச் திகே மேத்யூ பெலுலோக் லாலோ கம்போங். லெபோ கா; எஸ்கே லாங் சைட்; எஸ்கே லாங் துங்கன்; எஸ்கே லாங் மோ; எஸ்கே லாங் மெகபார்; எஸ்கே லாங் ஜெகிதான்; எஸ்கே லாங்; எஸ்கே லியோ மாதோ; மற்றும் எஸ்கே லாங் பங்கா.

"அந்த மையங்களுக்கான புதிய வாக்குப்பதிவு தேதி அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் பாதுகாப்பான நிலைக்கு திரும்பிய பின்னர் அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.