ஷா ஆலம் நவ 19 ;- டேவான் ராக்யாட்டின் 22 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க சிலாங்கூர் முழுவதும் 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு, நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் முன்கூட்டியே வாக்களிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதை அடுத்து திரலாக காலையில் கூடிவிட்டனர்.
சிலாங்கூர் கினி தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடாளுமன்றத் தொகுதிகளின் சமீபத்திய முன்னேற்றங்களை காலை 8 மணிக்கு திறக்கும் வாக்குச் சாவடியில் இருந்து மாலை 6 மணிக்கு மூடும் வரை கொண்டு வருகிறது.
மதியம் 12.00: செகோலா மெனெங்கா சைன்ஸ் கோலா சிலாங்கூர் வாக்குச் சாவடியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் காலை 11 மணி நிலவரப்படி ஐந்து மற்றும் ஆறு சேனல்களில் இருந்து கிட்டத்தட்ட 3,000 இளம் வாக்காளர்கள் வந்ததாக மதிப்பிட்டுள்ளனர்.
சுபாங் நாடாளுமன்றத்திற்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வோங் சென் இன்று காலை வாக்களித்து முடித்தார். மேலும், வாக்களிக்கும் பொறுப்பை பொதுமக்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது
11:40 am: அதிகரித்து வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை காரணமாக செகோலா மெனெங்கா சைன்ஸ் கோலா சிலாங்கூர் வாக்குச் சாவடியின் முன் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
கோலா சிலாங்கூர் மற்றும் செலாயாங்கில் வானிலை சூடாகவும், ஹுலு லங்காட்டில் வெயிலாகவும் இருக்கிறது.. கோலா லங்காட்டில் மேகமூட்டம்.
காலை 10 மணி நிலவரப்படி, வாக்குச்சாவடி திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுமார் 20 சதவீத வாக்காளர்கள் அந்தந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் பூச்சோங் பாராளுமன்ற வேட்பாளர் யோ பீ யின் சுற்றுப்புற குடியிருப்பாளர்களை பாராளுமன்ற வாக்குச்சாவடிக்கு அழைத்து வர போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.
ஸ்ரீ கெம்பாங்கன்: 012-676 972
ஸ்ரீ செர்டாங்: 016-221 4784
பூச்சோங்: 012-645 8891 / 019-454 7894 / 017-228 0043
சுங்கை பீசி இண்டா, புக்கிட் பெலிம்பிங்: 011-3937 3008
ஆகிய எண்களில் வாகன உதவி வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
காலை 11:00: டத்தோ மந்திரி புசார் அனைத்து மலேசியர்களுக்கு, குறிப்பாக சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கில் உள்ள வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
"அனைத்து தேர்தல் ஆணைய ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஊடக ஊழியர்களுக்கும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"மலேசியாவின் நலனுக்காக உங்களால் முடிந்தவரை உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்" என்று கோம்பாக் தொகுதிக்கு போட்டியிடும் அவர் கூறினார்.








