ECONOMY

தஞ்சோங் காராங், கோலா சிலாங்கூர் மற்றும் காப்பாரில் கடுமையான போட்டியா?

18 நவம்பர் 2022, 2:30 PM
தஞ்சோங் காராங், கோலா சிலாங்கூர் மற்றும் காப்பாரில்  கடுமையான போட்டியா?

ஷா ஆலம், நவ. 18: இந்த 15 பொதுத்தேர்தலில் கடுமையான போட்டிகளை எதிர்நோக்கியுள்ள , மலேசியாவில் உள்ள 45 தொகுதிகளில் , சிலாங்கூரில் உள்ள நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கும் என ஒரு கருத்துக்கணிப்பு ஆய்வு நிறுவனமான மெர்டேக்கா மையம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில் கடுமையான தொகுதிகளாக அது குறிப்பிட்டுள்ள இடங்கள் சுங்கை புசார், தஞ்சோங் காராங், கோலா சிலாங்கூர் மற்றும் காப்பார்  ஆகியவை அடங்கும்.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள 26 தொகுதிகளில், மாநிலத்தில் உள்ள மூன்று இடங்கள் மட்டுமே கடுமையான போட்டியை எதிர்கொண்டதாக இல்ஹாம் மையம் குறிப்பிட்டது: சுங்கை பூலோ, சுங்கை புசார், கோலா சிலாங்கூர்.

நவம்பர் 3 முதல் 18 வரையிலான காலக்கட்டத்தில் மெர்டேக்கா மையத்தின் சர்வேயில் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) 82 இடங்கள் வரை வெல்லும் என்றும், இல்ஹாம் மையம் கூட்டணி 86 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது என்பது குறித்து சிலாங்கூர் கினி செய்தி வெளியிட்டுள்ளது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.