ALAM SEKITAR & CUACA

வேட்பாளர்கள் மாற்றம்- ஜாஹிட்டின் செயலால் ஆறு தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களுக்கு எதிராக கீழறுப்பு

18 நவம்பர் 2022, 9:58 AM
வேட்பாளர்கள் மாற்றம்- ஜாஹிட்டின் செயலால் ஆறு தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களுக்கு எதிராக கீழறுப்பு

ஷா ஆலம், நவ 18- பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை மாற்றிய தேசிய முன்னணி  தலைவரின் செயலால் ஆறு தொகுதிகளில் “கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எதிர்வினையாற்றும் சம்பவங்கள்" நிகழ்ந்துள்ளன.

தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தன்னலக் குழுக்கள் புறந்தள்ளியது மற்றும் கவனிக்கத் தவறியது, கட்சியின் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதது போன்றவை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வாக்களிப்பதில்லை அல்லது எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பது என்ற எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தியது என்று பிரசித்தி பெற்ற கருத்துக் கணிப்பு அமைப்பான இல்ஹாம் சென்டர் கூறியது.

கெதேரே, மாரான், தஞ்சோங் காராங், ஜெலுபு, தெங்காரா, கோத்தா திங்கி உள்ளிட்ட தொகுதிகளில் புதிய வேட்பாளருக்கு எதிராக கீழறுப்பு செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அது தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.