சுபாங்.நவ.17- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடு முழுவதிலும் நடத்தும் சூறாவளி பிரச்சாரத்தில் நேற்று டத்தோ ரமணனுக்கு ஆதரவாக பேசிய கூட்டத்தில்
நாடாளுமன்றம் முடக்கப்பட்டது! அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவில்லை! தான் ஸ்ரீ முகிடின் பிரதமர், கைரி சிறப்பு விவகாரத்துறை அமைச்சர். இருவரும் கூட்டு சேர்ந்து கோவிட் 19 எதிரான நடவடிக்கைக்கு மொத்தம் 580 பில்லியன் (58000 கோடி) ரிங்கிட் செலவு செய்துள்ளனர்.
இதற்கு முறையான அளவில் டெண்டர் விடப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எல்லா நடவடிக்கைகளும் பேச்சுவார்த்தை டெண்டர் வழி செலவு செய்யப் பட்டது எப்படி என்று டத்தோ ஸ்ரீ அன்வார் சுபாங் வட்டாரத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்ற வேட்பாளர் டத்தோ இரமணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
3,000 த்துக்கும் மேற்பட்ட வாக்காளர் புடை சூழ குவிந்திருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உற்சாகத்துடன் பிரச்சார உரை நிகழ்த்தினார்.
எனக்கு பிரதமராகும் அதிர்ஷ்டம் இல்லை என்று முகிடின் கூறியுள்ளார். அம்னோவை சேர்ந்த 15 பேர் எனக்கு ஆதரவு தெரிவித்து சத்தியப்பிரமாணம் செய்து கடிதத்தை மாமன்னருக்கு அனுப்பி வைத்தனர். அம்னோவில் நீதிமன்ற நடவடிக்கை எதிர்நோக்கியிருக்கும் டத்தோ நஜிப், டத்தோ ஸ்ரீ சயிட் ஹமிடி மற்றும் பலருக்கு எதிரான வழக்கில் இருந்து, அவர்களை மீட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
இந்த நிபந்தனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஊழல் பேர்வழிகளின் ஆதரவு தேவையில்லை என்று அவர்களின் ஆதரவில் இருந்து ஒதுங்கி கொண்டேன் என்று தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமராகவே விரும்புகிறேன். அதற்கு அனைவரும் டத்தோ ரமணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த ஊழல் பெருச்சாளிகளை அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்க வேண்டும். ஊழலை துடைத்தொழிக்க வேண்டும்.








