ALAM SEKITAR & CUACA

தாமான் கிராமாட் பல்நோக்கு மண்டபத்தில் இன்று ஹராப்பானின் மாபெரும் பிரசாரக் கூட்டம்

16 நவம்பர் 2022, 4:49 AM
தாமான் கிராமாட் பல்நோக்கு மண்டபத்தில் இன்று ஹராப்பானின் மாபெரும் பிரசாரக் கூட்டம்

ஷா ஆலம், நவ 16- தாமான் கிராமாட் ஏயு2 பல்நோக்கு மண்டபத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு சிலாங்கூர் மாநில நிலையிலான மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஹராப்பான் கூட்டணி நடத்தவுள்ளது.

“கித்தா போலே“ (நம்மால் முடியும்) எனும் கருப்பொருளில் ஹராப்பான் செயலாக்க மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில் ஹராப்பான் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வர்.

ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் முக்கியத் தலைவர்களாவர்.

சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றுவர்.

இந்த பிரசாரக் கூட்ட நிகழ்வுகளை பொது மக்கள் பக்கத்தான் ஹராப்பான் பேஸ்புக் வாயிலாக நேரடியாக காணலாம்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.