ECONOMY

மக்கள் மனதில் மாற்றம் தெரிகிறது - அமிருடின் ஷாரி

13 நவம்பர் 2022, 3:36 PM
மக்கள் மனதில் மாற்றம் தெரிகிறது - அமிருடின் ஷாரி

கோம்பாக், நவம்பர்.13- மக்கள் மனங்களில் மாற்றம் தெரிகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், ஏனெனில்  பக்காத்தான் ஹராப்பான் மீதான வாக்காளர்களின் உணர்வும் ஆதரவும் அதிகரித்து உள்ளது” என்று கோம்பாக் தொகுதியின் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கோம்பாக் தாமான் பெர்விரா ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கி வைத்த பிறகு அவர் பேசினார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால்,கோம்பாக் தொகுயியில் வாக்காளர்கள் அவர்களது ஆதரவை அதிகமாக தருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.

மேலும் இங்கு இருக்கும் இளைஞர்களும் அவர்கள் ஆதரவை பெரிதாக அளித்து வருகிறார்கள்.

இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்ற பிறகு கோம்பாக் தொகுதியில் இருக்கும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நிறைய செய்ய ஆசை படுகிறேன். அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி சொந்த தொழில் செய்ய ஆசை பட்டவர்களுக்கும் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன் என்று அவர் கூறினார்

ஆர்.பார்த்திபன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.