கோம்பாக், நவம்பர்.12- கோம்பாக் தொகுதி மக்கள் கேட்டு என்றைக்கும் இல்லை என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னதே இல்லை என்று கோம்பாக் தொகுதியில் வசித்து வரும் புவேந்திரன் கூறினார்.
அந்த கோம்பாக் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்பாட்டில் கடந்த ஆண்டுகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது அதில் தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை ஏற்பாடு செய்து தரும் நிகழ்விற்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பெரிய ஆதரவை வழங்கினார் என்று அவர் கூறினார்.
மேலும் கோம்பாக் தொகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நிறைய செய்து இருக்கிறார் என்றும் சிவஞானம் பேசினார்.
இளைஞர்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வாங்குவதற்கு அவர் ஏற்பாடுகள் செய்து வந்து கொண்டு இருக்கிறார்.
அதுமட்டுமின்றி விளையாட்டு போட்டிகள், பி40 பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பு வசதி போன்ற ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் இருக்கிறார் என்று அவர் கூறினார்
செய்திகள் ஆர்.பார்த்திபன்








