பந்திங், நவ.12- நாடு முழுவதும் சிகப்பு அலை வீசத் தொடங்கி விட்டது. இதே சிகப்பு அலை கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியிலும் பலமாக வீசுகிறது. நம்பிக்கை கூட்டணியின் வெற்றி நிச்சயம் என்பது சிலாங்கூர் இன்று மேற்கொண்ட கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நேற்று கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு சில முக்கிய நபர்களை கண்டு ஆய்வு மேற்கொண்ட போது இத்தகவல் தெரிய வந்தது. இவ்வட்டாரத்தில் நன்கு புகழ் பெற்ற கலைஞர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர் ரவியிடம் (வயது 51) கேட்ட போது நாடு முழுவதும் மாற்றத்தக்கான அலை வீசுகிறது என்பதை தன்னால் உணர முடிவதாக கூறினார். தமிழர்கள் மற்றும் சீனர்கள் மத்தியில் இந்த அலை மிக நீண்ட காலமாக வீசுகிறது. ஆனால் தற்போது மலாய்க்காரர்கள் மத்தியிலும் சிகப்பு அலை பரவலாக வீசத் தொடங்கி விட்டது. இது மா பெரும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. இதன் வழி டத்தோ ஸ்ரீ அன்பர் இப்ராஹிம் அடுத்த 10 வது பிரதமராக ஆட்சியில் அமர்வது திண்ணம் என்று நாடறிந்த நல்ல கலைஞர் எம்.ஜி.ஆர் ரவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இதே போல் இவ்வட்டாரத்தில் உள்ள தினேசன் ( வயது 29 ) கேட்ட போது " நம்பிக்கை கூட்டணியின் வெற்றி தெரிகிறது " என்று கூறினார். கடந்த தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை கூட்டணிக்கும் சட்ட மன்றத்தில் பாஸ் வேட்பாளர் யுனோசுக்கும் வாக்களித்தேன். ஆனால் இம்முறை பாஸ் கட்சிக்கு வாக்களிப்பதில்லை என்று மிக நீண்ட காலமாகவே முடிவு செய்து விட்டேன். ஆகையால் இம்முறை கோலலங்காட் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கிறேன் என தினேசன் கூறினார்.

இதே போல் தெலுக் வட்டாரத்தில் பொது நலச் சேவையாளரான தர்மராஜிடம் கேட்ட போது இத்தொகுதியில் பக்கத்தானுக்கும் பெரிக்காத்தானுக்குமிடையே தான் பலத்த போட்டி. இருப்பினும் பக்காத்தான் வெற்றியை இப்பொழுதே உணர முடிகிறது. மலாய்க்காரர்களிடம் அம்னோ மீதான வெறுப்பு தெரிகிறது. அம்னோவினர் ஊழல் வாதிகள் என்பது ஊரறிந்த இரகசியமாகி விட்டது. இதனால் மலாய்க்காரர்கள் பேராதரவும் நம்பிக்கை கூட்டணிக்கு தான். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று மூவின பேராதரவும் நம்பிக்கை கூட்டணிக்கு தான். இதன் வழி விரைவில் நடக்க விருக்கும் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி மகத்தான வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வட்டாரத்தில் சொந்த தொழில் செய்து வருபவரான முருகன் அர்ஜுணன் ( வயது 49 ) நாடு முழுவதும் ஆட்சி மாற்றத்த்திக்கான அலை வீசத் தொடங்கி விட்டது. இதன் வழி கோல லங்காட் தொகுதியில் பக்காத்தான் வெற்றி உறுதி செய்யப் பட்டு விட்டது என்று அவர் கூறினார்.
மேலும் மாசிலாமணி, ஆறுமுகம் குப்பனும் சிகப்பு அலை வீசுவதை தங்களால் உணர முடிவதாக கூறினர்








