ALAM SEKITAR & CUACA

தலைமுறை காக்க அணி திரண்டு வாரீர் கிள்ளான் நாடாளுமன்ற வேட்பாளர் கணபதி ராவ் அழைப்பு.

9 நவம்பர் 2022, 3:54 PM
தலைமுறை காக்க அணி திரண்டு வாரீர் கிள்ளான் நாடாளுமன்ற வேட்பாளர் கணபதி ராவ் அழைப்பு.

கிள்ளான். நவ.9  எதிர்வரும் 19 தேதி நடைபெறும் 15 வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க   இந்திய சமுதாயம் அலையென திரண்டு வந்து வாக்களித்து அடுத்த தலைமுறை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வழி வகுப்பீர் என்று இந்திய சமுதாயத்திக்கு அழைப்பு விடுத்தார்.

கிள்ளான் நாடாளுமன்றத்தின் நம்பிக்கை கூட்டணியில் வேட்பாளர் கணபதி ராவ். கடந்த காலத்தில் இந்திய சமுதாயம் இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கும் பிளவு படாத ஆதரவை இந்திய சமுதாயல் கொடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் இந்தியர்கள் திரண்டு வரவில்லை. இந்தியர்கள் கணிசமான அளவில் வாக்களிக்க வராததால் வெற்றியை பறி கொடுத்தோம். 15 வது பொதுத் தேர்தலில் அனைவரும் அலை கடலென திரண்டு வந்து 2008 ஆம் ஆண்டு  ஹின்றாப் கொண்டு வந்த பேரலையை  மீண்டும் கொண்டு வர வேண்டும்.

 இந்த தேர்தலிலும் அந்த மகத்தான சாதனை நாம் மீண்டும் படைக்க வேண்டும் என்று ஹின்றாப் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த வழக்கறிஞர் கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.

ஆளும் தேசிய முன்னணி 22 மாத நம்பிக்கை கூட்டணி ஆட்சியை மிகை படுத்தி பேசி திசை திருப்பி வருகின்றனர். குறிப்பாக ம.இ.கா.வினர் இதனை செய்து வருகின்றனர். மக்கள் நமக்கு 5 ஆண்டுகளுக்கு ஆட்சி உரிமையை வழங்கினார்கள். ஆனால் சில துரோகிகளோடு இணைந்து கொள்ளைப் புறமாக ஆட்சியை தட்டி பறித்த கொள்ளைக்கார கும்பல் இன்று புலம்பிக் கொண்டிருக்கிறது.

கடந்த 3 தவணைகளாக சிலாங்கூர் மாநில அரசை வெற்றிகரமாக நம்பிக்கை கூட்டணி வழி நடத்தி வருகிறது.  இந்திய சமுதாயத்திக்கு பல சிறந்த சேவைகளை நாம் செய்து  வருகிறோம்.

மத்திய அரசாங்கத்தை நம்பிக்கை கூட்டணி இந்த தேர்தலில் கைப்பற்றினால் நாடாளவில்  மகத்தான சேவையை இந்திய சமுதாயத்திக்கு வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை  தெரிவித்தார்.

இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தை இந்த தேர்தலிலும் நாம்  கொண்டு வர முடியும்.

மலாய்க்காரர்களும் சீனர்களும் எனக்கு கிள்ளான் தொகுதியில் மாபெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர். செல்லும் இடம் எல்லாம் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

சிலாங்கூரில் உள்ளஅனைத்து நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் இந்திய சமுதாயம் பிளவு படாத ஆதரவை வழங்கி அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கிள்ளான் தொகுதியில் களம் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டிருக்கும் கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.