ECONOMY

கொட்டும் மழையில் விபத்து! முதலுதவி செய்ய களம் இறங்கிய டாக்டர் சத்ய பிரகாஷ்

8 நவம்பர் 2022, 8:05 AM
கொட்டும் மழையில் விபத்து! முதலுதவி செய்ய களம் இறங்கிய டாக்டர் சத்ய பிரகாஷ்

உலு சிலாங்கூர், நவம்பர்.8-   உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சத்ய பிரகாஷ், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினார்.

உலுயாம் பாரு சாலையில் பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருந்த போது வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதை கண்ட அவர் உடனடியாக அங்கு சென்று முதலுதவி சேவையில் ஈடுப்பட்டார்.

மேலும் அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர் என்பதால் வாகனத்தில் இருந்தவர்களுக்கு அவர் முதலுதவி சிகிச்சைகள் வழங்கினார்.

அந்த வேளையில் அடுத்த நிகழ்வு சற்று நேரத்தில் தொடங்கவுள்ளதாக அவரது அதிகாரி அப்போது நினைவுறுத்தினார். அவசரம் இல்லை பிறகு செல்லலாம் நாம் முதலில் இவர்களை பாதுகாத்து ஆக வேண்டும் என தெரிவித்தபடி, கொட்டும் மழையிலும் அவர் சேவை செய்த காட்சி காண்பவர் மனதை உருக செய்வதாக இருந்தது..

செய்தி- ஆர்.பார்த்திபன்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.