சுங்கை பூலோ.நவ.6- கைரி ஜமலுடின் சுங்கை பூலோவில் தேசிய முன்னணியின் வேட்பாளாராக இறுதி நேரத்தில் களத்தில் இறக்கியுள்ளது தேசிய முன்னணி. கைரி ஜமலுடின் சுங்கை பூலோ மண்ணின் மைந்தர் அல்ல. அதே வேளையில் இப்பகுதிக்கு புதியவர். அம்னோ உட்கட்சி பிரச்னையால் இறுதி நேரத்தில் களம் இறக்கப் பட்டுள்ளார்.
உள்ளூரை சேர்ந்த அம்னோ வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்று இத்தொகுதி அம்னோ மிக நீண்ட காலமாக கோரிக்கை வைத்து அரசியல் நடத்தி வந்தது. இம்முறை அம்னோ வேட்பாளர் களம் இறக்கப் பட்டாலும் பாரா சூட் வழியாக நெகிரியிலிருந்து இங்கு இறக்கப் பட்டது, தொகுதி அம்னோவினரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
ம.இ.கா. ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய அதிருப்தி
மேலும் கடந்த 6 தவணையாக இத்தொகுதியை ம.இ.கா. பிரதிநிதித்து வந்தது. இம்முறை இத்தொகுதியில் உசா நந்தினி போட்டியிடுவார் என்று கூறி ம.இ.கா. தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கடந்த 4 ஆண்டுகளாக களத்தில் இறக்கி வேலை செய்து வந்தார். இறுதி நேரத்தில் தொகுதியை அம்னோவிக்கு தாரை வார்த்து கொடுத்தது விட்டார். இது ம.இ.கா. ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொகுதியில் உள்ள ம.சீ.சாவும் சீன சமூகத்தின் செல்வாக்கை மிக நீண்ட காலமாகவே இழந்து விட்டது என்றால் அது மிகையாகாது.
மலாய், சீனர் மற்றும் இந்தியர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி டத்தோ ரமணனுக்கு பலம் சேர்த்துள்ளது. மேலும் இத்தொகுதியில் உள்ள 2 சட்ட மன்ற உறுப்பினர்களும் களத்தில் இறங்கியிருப்பது மேலும் வலு சேர்த்துள்ளன.
இதே போல் டத்தோ ரமணன் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள பக்காத்தான் தேர்தல் இயந்திரமும் இரவு பகல் பார்க்காமல் தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
வெற்றியை நோக்கி அடுத்த 13 நாட்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் டத்தோ ரமணனும் தேர்தல் இயந்திரமும் செயல் பட்டால் வெற்றி உறுதி என்று சுங்கைவே வட்டார பி.கே.ஆர் தலைவர் சாமிநாதன் சூளுரைத்தார்.
செய்தி சுப்பையா சுப்ரமணியம்








