ECONOMY

விளையாட்டுத் துறையில் தன் பிள்ளைகள் ஆர்வம் காட்ட பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் - அமிருடின் ஷாரி வேண்டுகோள்

6 நவம்பர் 2022, 6:29 AM
விளையாட்டுத் துறையில் தன் பிள்ளைகள் ஆர்வம் காட்ட பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் - அமிருடின் ஷாரி வேண்டுகோள்

கோம்பாக், நவம்பர்.6-இன்று காலை டேவான் லெம்பாக் கெராமாட்டில் எயு5 இல் தாமியா குழு ஏற்பாட்டில் கோம்பாக் கிண்ணம் மினி 4 சக்கரம் ரேஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 50 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வேளையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இடம் பிடிக்கும்  வெற்றியாளருக்கு 1,500 ரிங்கிட், இரண்டாவது வெற்றியாளருக்கு 800 ரிங்கிட், மூன்றாவது வெற்றியாளருக்கு 500 ரிங்கிட் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

இந்த விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பக்காத்தான் ஹராப்பான் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளரான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து சிறப்பித்தார்.

பொதுவாக கால்பந்து, ஓட்ட பந்தயம் போன்ற போட்டிகளில் மற்றும் இன்றி இது போன்ற விளையாட்டுகளிலும் தன் பிள்ளைகள் ஆறுவம் காட்டுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டு கொண்டார்.

அந்த வகையில் இது போன்ற விளையாட்டுகளை யாரும் பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. விளையாட்டுப் போட்டி என்றாலே கால்பந்து, ஓட்டபந்தயம், ஹாக்கி  போன்ற போட்டிகள் மட்டும்தான் பெரும்பாலான மக்களுக்கு தெரியும். அதனால் மினி 4 சக்கரம் ரேஸ் போன்ற போட்டிகளை நான் வரவேற்கிறேன் என்றார் அவர்.

மேலும் இது போன்ற விளையாட்டு போட்டிகள் மக்களுக்கு சென்று அடைய நான் கூடிய விரைவில் ஏற்பாடு செய்வேன் என்றும் அவர் கூறினார்.

ஆர்.பார்த்திபன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.