ALAM SEKITAR & CUACA

தைப்பிங்கில் வெள்ளம்- 153 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

6 நவம்பர் 2022, 5:35 AM
தைப்பிங்கில் வெள்ளம்- 153 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

ஈப்போ, நவ 6- தைப்பிங் வட்டாரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 50

குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் நேற்றிரவு வரை தொடர்ந்து துயர்

துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர்.

அவர்களில் 90 பேர் அல்-முஸ்தா பள்ளிவாசலிலும் 55 பேர் மாத்தாங்

குளுகோர் தேசிய பள்ளியிலும் எண்மர் கம்போங் பேராக் சூராவிலும்

தங்கியுள்ளதாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின்

பேச்சாளர் கூறினார்.

ஈஜோக் ஆற்றில் நீர் மட்ட வழக்கத்தை விட அதிகமாக இருந்த போதும்

எச்சரிக்கை அளவை விட குறைவாக உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில்

கூறினார்.

வெள்ளம் நிலை சீரடைந்ததும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு திரும்ப

அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக தைப்பிங் வட்டாரத்தின் பல

பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்

எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் தற்காலிக நிவாரண மையங்களில்

அடைக்கலம் புகுந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.