சிப்பாங், நவ 5- சிப்பாங் தொகுதியில் இம்முறை எட்டு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலில் களம் கண்டுள்ள வேட்பாளர்களில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் ஹராப்பான் கூட்டணி சார்பில் ராஜ் முன்னி அய்மான் அதிராவும் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவியான டத்தோஸ்ரீ ரினா ஹருணும் பெஜூவாங் கட்சி சார்பில் டத்தின் படுகா சே அஸ்மா இப்ராஹிமும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர்த்து தேசிய முன்னணி சார்பில் அனுவார் பாசிரான், பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சி சார்பில் ஆர். நாகேஸ்வர ராவ், பார்ட்டி உத்தாமா ராக்யாட் கட்சி சார்பில் டாவும் லியோங் ஆகியோருடன் சுயேச்சைகள் எம்.முனீஸ்வரன் மற்றும் ஷாருள் அம்ரி மாட் சாரி ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.








