ECONOMY

தெனோம் வேட்பு மனு தாக்கல் மையத்தில் கலவரம்- போலீஸ் விசாரணை

5 நவம்பர் 2022, 8:15 AM
தெனோம் வேட்பு மனு தாக்கல் மையத்தில் கலவரம்- போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், நவ 5- சபா மாநிலத்தின் தொனோம், டேவான் டிஎஸ்பி அந்தோனோமில் நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வின் போது கலவரம் ஏற்பட்டதை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடபில் சபா மாநில போலீஸ் தலைவர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லாவிடமிருந்து விரிவான அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

அச்சம்பவம் நிகழ்ந்தது உண்மைதான். இதன் தொடர்பில் சபா மாநில போலீஸ் தலைவரின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என அவர்  பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

தெனோம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கலவரம் மூண்டதை சித்தரிக்கும் காட்சிகள் முன்னதாக சமூக ஊடங்களில் பகிரப்பட்டன.

மலேசிய ஜனநாயக நல்வாழ்வுக் கட்சியின் (கே.டி.எம்.) வேட்பாளர் டத்தோ பீட்டர் அந்தோணியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்ததால் சினமடைந்த அக்கட்சி ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.