கோல சிலாங்கூர்.நவ.5- நமது வெற்றியை உறுதி செய்ய, தேர்தல் இயந்திரம் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். நமக்கிடையே பேசுவதை தவிர்த்து வாக்காளர்களை சந்தித்து உரையாடுங்கள். நமது சேவை எடுத்து சொல்லுங்கள். அவர்களின் ஊழலை நாடே அறியும் இருப்பினும் வாக்காளர்களிடம் எடுத்து சொல்லுங்கள். வெற்றியை கடுமையான உழைப்பின் வழியாகவே உறுதி செய்ய முடியும். புதிய வாக்காளர்களை சந்தித்து எடுத்து சொல்லுங்கள். நமது மகத்தான வெற்றியின் வழி நாட்டின் 10 வது பிரதமராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அமர செய்வோம் என்று கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர் மனுவை சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் டாக்டர் சூல்கிப்ளி கேட்டுக் கொண்டார்.
செய்திகள் சுப்பையா சுப்பரமணியம்








