ECONOMY

எதிர் தரப்பில் ஒரு பிரதமர் வேட்பாளரையாவது தரமான வேட்பாளர் என நிரூபிக்க முடியுமா? - டாக்டர் சத்ய பிரகாஷ் கேள்வி

4 நவம்பர் 2022, 12:47 PM
எதிர் தரப்பில் ஒரு பிரதமர் வேட்பாளரையாவது தரமான வேட்பாளர் என நிரூபிக்க முடியுமா? - டாக்டர் சத்ய பிரகாஷ் கேள்வி

உலு சிலாங்கூர், நவம்பர்-4  எதிர் தரப்பில் ஒரு பிரதமர் வேட்பாளரையாவது தரமான வேட்பாளர் என நிரூபிக்க முடியுமா? என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற பக்காத்தான்  வேட்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் சவால் விடுத்துள்ளார்.

நேற்று நடந்த உலு சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரப் படை அறிமுக விழாவில்  பேசிய டாக்டர் சத்ய பிரகாஷ் இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி  இந்த நாட்டின் அரசு செயல்பாடுகள் ஓரவஞ்சனையாக இருப்பதாகத் தெரிவித்த டாக்டர் சத்யபிரகாஷ், உலு சிலாங்கூரில் மக்கள் தொகை அதிகம், ஆனால் கோலா குபு பாருவில் உள்ள மருத்துவமனை என்ன லட்சணத்தில் உள்ளது? முழுமையான வசதி உண்டா? சில சிகிச்சைக்கு செலாயாங் சுங்கை பூலோ மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழல் தான் உள்ளது. அந்த மருத்துவமனைகள் அருகாமையில் உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பினார் .

தற்போது சுங்கை பூலோவில் போட்டியிடும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ரெம்பாவ் நாடாளுமன்றத்தில் உள்ள மருத்துவமனை அதிநவீன வசதியுடன் உள்ளது. அதை ஏன் இங்குச் செய்யவில்லை என டாக்டர் சத்ய பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.