ECONOMY

வேட்பு மனுத் தாக்கலை முன்னிட்டு உலு சிலாங்கூரில் ஐந்து சாலைகள் மூடப்படும்

4 நவம்பர் 2022, 9:21 AM
வேட்பு மனுத் தாக்கலை முன்னிட்டு உலு சிலாங்கூரில் ஐந்து சாலைகள்  மூடப்படும்

ஷா ஆலம், நவ 4- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலை முன்னிட்டு உலு சிலாங்கூரில் ஐந்து சாலைகள் வரும் சனிக்கிழமை போக்குவரத்துக்கு மூடப்படும்.

டேவான் செர்பகுணா மற்றும் மாவட்ட நில அலுவலகத்தின் காம்ப்ளெக்ஸ் சுக்கானில் நடைபெறும் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வையொட்டி பின்னிரவு 1.00 மணி தொடங்கி வேட்பு மனுத்தாக்கல் முடிவடையும் வரை இச்சாலைகள் மூடப்படும் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். சுஃபியான் அப்துல்லா கூறினார்.

ஜாலான் மெர்டேக்கா, ஜாலான் டத்தோ ஹாஜி கமாருடின், ஜாலான் அப்துல் ஹமிட், ஜாலான் மாட் கிலாவ், ஜாலான் டத்தோ மூடா ஜாபர்  ஆகியவையே போக்குவரத்து மூடப்படும் சாலைகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

இச்சாலைகளுக்கு மாற்றாக ஜாலான் குபு, ஜாலான் டத்தோ தாபால், ஜாலான் ராஜதுரை, ஜாலான் டத்தோ பாலாய், ஜாலான் அப்துல் ஹமிட், ஜாலான்  சைட் மஸ்யோர், ஜாலான் கோலாலம்பூர்-கோல லிப்பிஸ் சாலைகளுக்கு வாகனங்கள் வழி மாற்றி விடப்படும் என அவர் சொன்னார்.

வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்தும்படி வாகனமோட்டிகளை அவர்  கேட்டுக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.