ECONOMY

பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவில் வேட்பு மனுத்தாக்கல் மையங்களைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்படும்

4 நவம்பர் 2022, 9:06 AM
பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவில் வேட்பு மனுத்தாக்கல் மையங்களைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்படும்

ஷா ஆலம், நவ 4- வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயா மற்றும் டாமன்சாரா தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் மையங்களைச் சுற்றியுள்ள நான்கு சாலைகள் நாளை போக்குவரத்துக்கு மூடப்படும்.

ஜாலான் யோங் சூக் லின் சாலையின் ஐ.எம்.ஜே. கட்டிடம் தொடங்கி மெனாரா சோய் பூக் ஓன் வரையிலான பகுதியும் ஜாலான் 52/18 சாலையில் டெக்சஸ் சிக்கன் உணவகம் முதல் ரெஸ்டோரண்ட் அஜ்மீர் வரையிலான பகுதியும் போக்குவரத்துக்கு மூடப்படும் என பெட்டாலிங் ஜெயா மாநகர்  மன்றம் கூறியது.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் சிவிக் செண்டரை சுற்றியுள்ள இரு சாலைகளிலும் போக்குவரத்து அனுமதிக்கப்படாது என அது தெரிவித்தது.

பண்டார் உத்தாமா சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ள டாமன்சாரா தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கலை முன்னிட்டு  பியு 11/7 சாலை சந்திப்பு முதல் சாலை சமிக்ஞை விளக்கு வரையிலான பகுதி மூடப்படவுள்ளதாக அது குறிப்பிட்டது.

இச்சாலைகள் அனைத்தும் அதிகாலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மூடப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.