ECONOMY

புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு

4 நவம்பர் 2022, 8:46 AM
புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு

ஷா ஆலம், நவ 4- பொது மக்களிடமிருந்து டிவிட்டர் வழி கிடைத்த

புகாரைத் தொடர்ந்து ஷா ஆலம், மெர்போக் செம்பாக் சாலையில்

பழுதடைந்த இடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

இம்மாதம் 2 ஆம் தேதி பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத்

தொடர்ந்து 24 மணி நேரத்தில் அச்சாலைகளை இன்ஃப்ராசெல் சென்.

பெர்ஹாட் (இன்ஃப்ராசெல்) நிறுவனம் சீரமைப்பு செய்தது.

அதே சமயம் சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி

சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியிலும்

இந்நிறுவனம் ஈடுபட்டது. இது தவிர, பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள

ஜாலான் பாயா ஜெராஸ் குபு காஜா மெர்போக் சாலையிலும் சீரமைப்பு

பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த மாதம் சமூக ஊடகங்கள் வாயிலாக கிடைத்த புகார்களின்

அடிப்படையில் மாநிலத்தின் பல சாலைகள் சீரமைக்கப்பட்டன.

ஜாலான் ராஜா மூடா மூசா, கம்போங் ஜாலான் லாமா பஞ்சாங் பெடேனா,

சுங்கை பெசார், சபார் பெர்ணம் ஓலாக் லெம்புட், கோல லங்காட், ஜாலான்

சுங்கை பூசு, கோம்பாக், ஜாலான் சுங்கை தெக்காலி, உலு லங்காட்

ஆகியவை சீரமைப்பு செய்யப்பட்ட சாலைகளில் அடங்கும்.

சாலை பழுது தொடர்பான புகார்களை இன்ஃப்ராசெல் நிறுவனத்திற்கு

சமூக ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தும்படி அந்நிறுவனம் கேட்டுக்

கொண்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.