ECONOMY

கார்-லோரி மோதல்: தாதி பரிதாப மரணம்

4 நவம்பர் 2022, 8:46 AM
கார்-லோரி மோதல்: தாதி பரிதாப மரணம்

ஷா ஆலம், நவ 4-  சபாக் பெர்ணமிலிருந்து ஷா ஆலம் நோக்கி காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த தாதி ஒருவர் லோரியுடன் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கோர விபத்து  கிள்ளான்-தெலுக் இந்தான் சாலையின் 47வது கிலோ மீட்டரில் கோல சிலாங்கூர் பழைய நகருக்கு அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் பெரேடுவா மைவி ரகக் காரும் இஸூசு ரக லோரியும் சம்பந்தப்பட்டிருந்ததாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ரம்லி காஸா கூறினார்.

தனியார் மருத்துவமனை ஒன்றில்  பணி புரியும் அந்த தாதி  சபாக் பெர்ணத்திலுள்ள தனது வீட்டிலிருந்து வேலைக்கு ஷா ஆலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் தடத்தில் நுழைந்து லோரியுடன் மோதியது என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.