ALAM SEKITAR & CUACA

தாயாரைத் தாக்கியதாக புகார்- ஆடவனை போலீசார் கைது செய்தனர்

3 நவம்பர் 2022, 8:54 AM
தாயாரைத் தாக்கியதாக புகார்- ஆடவனை போலீசார் கைது செய்தனர்

கோலாலம்பூர், நவ 3- வீட்டைச் சுத்தம் செய்யவில்லை என்பதற்காக பெற்றத் தாயை கடுமையாகத் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா, சுங்கைவே கம்போங் லிண்டோங்கானில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

இந்த தாக்குதலில் 44 வயதான அந்த பெண்மணிக்கு முகத்திலும் உடம்பிலும் காயங்கள் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

வீட்டின் முன்கதவை பூட்டிய அந்த 19 வயதான அந்த இளைஞர் வீட்டிலிருந்து அழகுப் பொருள்களை தன் தாயாரை நோக்கி வீசியுள்ளார். அதோடு மட்டுமின்றி அவரின் முகத்தில் குத்தியதோடு நெஞ்சின் இடது பக்கத்திலும் காலால் மிதித்துள்ளார் என ஃபக்ருடின் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அப்பெண்மணியிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அவ்வாடவரைத் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஒரு குற்றப்பதிவைக் கொண்டுள்ள அந்த ஆடவர் விசாரணைக்காக இம்மாதம் 5 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.

அவ்வாடவர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் போதைப் பொருளை பயன்படுத்திருப்பது தெரியவந்தது. ஆபத்தான ஆயுதம் அல்லது பொருளைக் கொண்டு காயம் விளைவித்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் இச்சம்பவம் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இத்தகைய மூர்க்கத்தனமான சம்பவம் நிகழ்வது இது முதல் முறையல்ல. ஆகவே, அவ்வாடவருக்கு மனநலப் பிரச்னை உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.