ALAM SEKITAR & CUACA

15வது பொதுத் தேர்தல்- பாரிசான் வேட்பாளர் பட்டியலில் நான்கு அமைச்சர்கள் நீக்கம்

2 நவம்பர் 2022, 7:14 AM
15வது பொதுத் தேர்தல்- பாரிசான் வேட்பாளர் பட்டியலில் நான்கு அமைச்சர்கள் நீக்கம்

ஷா ஆலம், நவ 2- வரும் 15வது பொதுத் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் (தேசிய முன்னணி) கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் நான்கு அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொடர் மற்றும் பல்லுடக அமைச்சர்  டான்ஸ்ரீ அனுவார் மூசா, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம், அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா, தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் ஆகியோரே அந்த நால்வராவர்.

இந்த தகவலை நேற்று பாரிசான் வேட்பாளர்களின் பெயரை அறிவிக்கும் நிகழ்வின் போது அந்த கூட்டணியின் தலைவரான டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

எனினும், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் வசம் உள்ள தஞ்சோங்  காராங் தொகுதியின் வேட்பாளர் பெயர் இந்நிகழ்வில் அறிவிக்கப்படவில்லை.

மேலும், இந்த வேட்பாளர்  பட்டியலில் ஜெம்போல், கோலபிலா, பண்டார் துன் ரசாக், கோல நெருஸ், தும்பாட், கெப்போங் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் இடம் பெறவில்லை.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.