ஷா ஆலம், நவ 1: கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அனைத்து குற்றங்களுக்கும் 50 விழுக்காடு அபராதக் கழிவை வழங்குகிறது.பொது மக்கள் அபராதத் தொகையை செலுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
அபராதங்களை செலுத்துவதற்குரிய வாய்ப்பினை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுவதாகவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் கூறியது.
பொதுமக்கள் ip3ks, CEPat (Citizen E-Payment) மற்றும் PBTPay செயளிகள் மூலம் பணம் இணையத்தில் அபராதத் தொகையை செலுத்தலாம் .
இது தவிர கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக முகப்பிடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை பணம் செலுத்தலாம்.
மேல் விபரங்களுக்கு நகராண்மைக் கழக சட்டப் பிரிவை 03-3289 7385 இணைப்பு 30, 31, 32ல் என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ALAM SEKITAR & CUACA
அனைத்து விதமான குற்றங்களுக்கும் 50 விழுக்காடு அபராதக் கழிவு- எம்.பி.கே.எஸ். அறிவிப்பு
1 நவம்பர் 2022, 4:01 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



