ALAM SEKITAR & CUACA

போதைப் பொருள் வழக்கில் புதிய ஆதாரத்தை சிங்கை நீதிமன்றம் ஏற்றது- தூக்கிலிருந்து தப்பினார் புனிதன்

1 நவம்பர் 2022, 7:52 AM
போதைப் பொருள் வழக்கில் புதிய ஆதாரத்தை சிங்கை நீதிமன்றம் ஏற்றது- தூக்கிலிருந்து தப்பினார் புனிதன்

சிங்கப்பூர், நவ 1- சிங்கப்பூருக்குள் 28.5 கிராம் டயாமோர்பின் போதைக் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக மலேசியரான எம்.புனிதன் சமர்பித்த புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொண்ட அந்நாடு மேல் முறையீட்டு நீதிமன்றம் அவர் விடுதலை செய்தது.

புனிதனுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் சிங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொலைதூர விசாரணை மூலம் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபராக அவர் விளங்குகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற போதைப் பொருள் பரிமாற்றத்தின் முக்கியப் புள்ளியாக விளங்கியவர் புனிதன் என்று வழக்கு விசாரணையின் போது இரு பொருள் பட்டுவாடா பணியாளர்களில் ஒருவர் அடையாளம் காட்டியிருந்தார்.

முன்னதாக 2011ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சிங்கையின் வேஸ்ட்கோஸ்ட் மேக்டோனால்ட் கார் நிறுத்துமிடத்தில் போதைப்பொருள் பறிமாற்றம் செய்வதற்காக இரு பொருள் பட்டுவாடா பணியாளர்களை புனிதன் அறிமுகப் படுத்தியிருந்தார்.

மேல் முறையீட்டில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்  என்று நீதிபதி தாய் யோங் குவாங் தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த தீர்ப்பின் முழு விபரங்கள் நீதிமன்ற அகப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

இந்த வழக்கை நீதிபதி தாய், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மற்றும் அண்ட்ரூ பாங் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்த து.

புனிதன் சார்பில் கே அண்ட் எல் கேட்ஸ் ஸ்ட்ரேய்ட்ஸ் லாவ் எல்எல்சி  நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் நாராயணன் ஸ்ரீநிவாசன் ஆஜரானார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.