ALAM SEKITAR & CUACA

சுங்கை சிப்புட் , தாப்பா,  தஞ்சோங் காராங்  மற்றும் மாநில சட்டமன்ற தொகுதி சங்காட் ஜூங்கில் யாருக்கு ?

30 அக்டோபர் 2022, 3:24 PM
சுங்கை சிப்புட் , தாப்பா,  தஞ்சோங் காராங்  மற்றும் மாநில சட்டமன்ற தொகுதி சங்காட் ஜூங்கில் யாருக்கு ?

ஷா ஆலம் , அக் 30;-  பக்காத்தான் ஹராப்பான் தலைவர், டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் பல பக்காத்தான் தேர்தல் குழுக்கள் பார்ட்டி அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு, டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மற்றும் பிற தலைவர்களுடன் சனிக்கிழமை (அக் 29) கலந்துரையாடல் நடத்திய பின்.மாநில சட்டமன்ற தொகுதி  சங்காட் ஜூங்கில் போட்டியிடும்  வாய்ப்பை, டிஏபிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், பல பக்காத்தான் தேர்தல் குழுக்களுடன் கலந்துரையாடலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.  மேலும் பேராக் மாநிலத்தில் உள்ள, தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் போட்டியிடும் என்று அன்வார் கூறினார்.

“முடாவின் உறுப்பினர்களில் ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கட்சியின் தலைவர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மானுடன்  பேச பட்டதாகவும்  கூறினார்.

"தாப்பாவில்  பிகேஆர்  கே.சரஸ்வதி போட்டியிடுவார், மூடாவிற்கு மூவார், தஞ்சோங் காராங், தஞ்சோங் பியா மற்றும் பல உள்ளன, அவை விரைவில் அறிவிக்கப்படும்," என்று அவர் கூறினார், பிகேஆர் செம்புரோங் மற்றும் சுங்கை சிப்புட்  நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.