ALAM SEKITAR & CUACA

மலாக்காவில் வெள்ளம்- 145 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

30 அக்டோபர் 2022, 8:42 AM
மலாக்காவில் வெள்ளம்- 145 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

மலாக்கா, அக் 30 - இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 145 பேர் இன்று காலை அலோர்காஜா மற்றும் மலாக்கா தெங்காவிலுள்ள  மூன்று நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

அலோர் காஜாவில்  கம்போங் டேவான் காடேக்  மற்றும் டேவான் கம்போங் பெலிம்பிங்கில் உள்ள நிவாரண மையங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலாக்கா தெங்காவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் அங்குள்ள தேசிய பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.

அலோர் காஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கம்போங் காடேக், பெங்கலான், கம்போங் பாஞ்சோர், கம்போங் பெரிங்கின் ஆகிய பகுதிகளும்   மலாக்கா தெங்காவில்  கம்போங் லஞ்சூட் மானிஸ் மற்றும் கம்போங் தானா மேரா ஆகிய பகுதிகளும் அடங்கும் என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.