ECONOMY

இலட்சியங்களுடன் நம்பிக்கை பயணத்தின் சிலாங்கூர் அத்தியாயம் தொடக்கம்

27 அக்டோபர் 2022, 1:44 PM
இலட்சியங்களுடன் நம்பிக்கை பயணத்தின் சிலாங்கூர் அத்தியாயம் தொடக்கம்

கோல சிலாங்கூர்.அக்.26- நேற்று கோல சிலாங்கூரில் நம்பிக்கை கூட்டணியின் " இலட்சியங்களுடன் நம்பிக்கை பயணம் " அசாம் ஜாவா பொது மண்டபத்திற்கு அருகில் நடைபெற்றது. கோல சிலாங்கூர் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு நம்பிக்கை கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

அமனா கட்சியின் தேசியத் தலைவரும் நாட்டு மக்களால் செல்லமாக அழைக்கப்படும் மாட் சாபு, ஜ.செ.காவை பிரதிநிதித்து அன்னா யோ, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

அனைவரும் அனல் பறக்க பிரச்சார உரை நிகழ்த்தினார்கள்.   அனைவருக்கும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.. மேலும் இவர்களுடன் நம்பிக்கை கூட்டணியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோலா சிலாங்கூர் தொகுதியை சேர்ந்த பி.கே.ஆர்,  ஜ.செ.க,  அமனா மற்றும் மூடா கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் இந்நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு நம்பிக்கை கூட்டணியின் சின்னம் பதித்த கொடி வழங்கப் பட்டன.

கலந்துக் கொண்ட முக்கியத் தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சார உரையுடன் தேர்தல் யந்திரம் முடுக்கி விடப்பட்ட இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.