ECONOMY

போர்ட்டிக்சன் தொகுதியில் ஹராப்பான் சார்பில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் போட்டி

22 அக்டோபர் 2022, 3:14 AM
போர்ட்டிக்சன் தொகுதியில் ஹராப்பான் சார்பில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் போட்டி

போர்ட்டிக்சன், அக் 22- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் போட்டியிடவுள்ளார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற ஜெலாஜா ஹராப்பான் நெகிரி செம்பிலான் பேரணி நிகழ்வில் உரையாற்றிய போது பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

போர்ட்டிக்சன் மக்களின் நம்பிக்கைக்குரிய ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். எனக்கு இணையான அல்லது கூடுதலான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். தனித்துவம் கொண்டவராகவும் உள்ளுர்வாசியாகவும் இருக்க வேண்டும். அமிருடின் வாய்ப்பினைக் கேட்கவில்லை. எனக்கு வேண்டாம் என்றுதான் அவர் கூறினார்.

இது சிறந்த உதாராணம். இந்த முடிவு அவரின் மந்திரி புசார் பதவிக்கு இடையூறை ஏற்படுத்தாது. அமிருடின் இப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு போர்ட்டிக்சன் தொகுதி தலைவராகவும் உள்ளார். இது போர்ட்டிக்சன் மக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு விஷயமாகும். நமக்கு பதவி முக்கியமல்ல. சேவைதான் முக்கியம். இதுவரை தம்புன் மற்றும் போர்ட்டிக்சன் ஆகிய இரு தொகுதிகளில்தான் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம் என்றார் அவர்.

வரும் பொதுத் தேர்தலில் தாம் பேராக் மாநிலத்தின் தம்புன் தொகுதியில் போட்டியிடவுள்ளத் தகவலை அன்வார் நேற்று முன்தினம் அறிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற போர்ட்டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அன்வார் இதர ஆறு வேட்பாளர்களை 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.